VI STD NEW SYLLABUS MATHS BOOK - I TERM - FORMULA: LESSON - 5 & 6




5. புள்ளியியல்


1. தரவு என்றால் தகவல்கள் மற்றும் எண்ணுருக்களைக் கொண்டு முடிவுகளைப் பெறுதல் ஆகும். தரவு என்பது தகவல்களைச் சேமிப்பது, அளவிடுவது மற்றும் பகுப்பது, பிறகு அவற்றைப் படமாகவோ அல்லது வரைபடமாகவோ காட்சிபடுத்துவது ஆகும்.

2. திரட்டப்பட்ட தகவல்கள் அல்லது உண்மைகளைத் தரவுகள் என்கிறோம்.

3. தரவு (Data) என்ற சொல் முதன் முதலில் 1640 களில் பயன்படுத்தப்பட்டது. 1946 ல் தரவு என்ற சொல் “பரிமாற்றத்திற்கும், கணினியில் சேமித்து வைப்பதற்கும் உகந்த” என்று பொருள்பட்டது.

4. 1954 இல் தகவல் செயலாக்கம் (Data Processing) என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இலத்தீன் மொழியில் “கொடுத்த” அல்லது “கொடுக்க” எனப் பொருள்படும்.

5. சேகரிக்கும் அடிப்படையில் தரவுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை முதல் நிலைத் தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள்.

6. முதல் நிலைத் தரவுகள்:

      முதல் நிலைத் தரவு என்பது மூலத்தரவிலிருந்து பெறப்பட்ட தொகுக்கப்படாத தகவல்கள் ஆகும். மேலும் இத்தரவுகள் வகைப்படுத்துதல் மற்றும் அட்டவணைப்படுத்துதல் போன்ற புள்ளியியல் சார்ந்த செயல்முறைக்கு உட்படாத தரவுகளாகும்.

      எ.கா.:
          1. வகுப்பிற்கு வருகை தராத மாணவர்களின் பட்டியலை ஆசிரியர் தயாரித்தல்.

          2. மாணவர்களின் எழுத்துப் பழக்கங்களைப் பற்றி எழுதுகோல் தயாரிக்கும் ஒரு நிறுவனம் நடத்தும் கணக்கெடுப்பு

          3. மாணவர்கள் பல்வேறு வகையான இலைகளைச் சேகரித்து வகைப்படுத்துதல்.

7. இரண்டாம் நிலைத் தரவு:

      இரண்டாம் நிலைத் தரவுகள் என்பன ஏற்கனவே, திரட்டப்பட்ட தரவுகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு குறிப்பிட்ட நபரால் திரட்டப்பட்டுப் பிறரால் அத்தரவுகள் பயன்படுத்தப்படுவதாகும்.
      எ.கா.:
       1. வகுப்பிற்கு வருகை தராத மாணவர்களின் பட்டியலைத் தலைமை ஆசிரியர் பள்ளி அலுவலகத்திலிருந்து பெறுதல்.

       2. ஒரு வலைத்தளத்திலிருந்து மட்டைப்பந்து (கிரிக்கெட்) தரவுகளைப் பெறுதல்.

       3. தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களிலிருந்து பெறும் தரவுகள்.

       4. தொலைபேசி எண்களை தொகுப்பு நூலிலிருந்து பெறுதல்.

8. முதல் நிலை தரவுகள் இரண்டாம் நிலை தரவுகளை விட நம்பகத்தன்மை வாய்ந்தவை. ஏனெனில் அவை நேரடியாகச் சேகரிக்கப்படுகிறது.

9. நேர்க்கோட்டுக் குறிகளைப் பயன்படுத்தித் தரவுகளை வகைப்படுத்தும் முறையே நிலையான திட்ட முறையாகும்.

10. * ஒவ்வொரு தகவலின் நிகழ்வு ஒரு குத்துக் கோட்டுக் குறி ‘ I ‘ ஐக் கொண்டு குறிக்கலாம்.

   * ஒவ்வொரு ஐந்தாவது குறியும் முந்தைய நான்கு குறிகளின் குறுக்கே  எனக் குறிக்கப்படுகிறது.

   * இம்முறை நேர்க்கோட்டுக் குறிகளை எளிதாக எண்ணுவதற்கு உதவுகிறது.

11. பட விளக்கப்படம் என்பது தரவுகளை, படங்கள் மூலம் குறிப்பிடுவது ஆகும்.

12. பட விளக்கப்படத்தின் பயன்பாடு:
      * தரவுகளை எளிதாக விளக்கவும் பகுத்தாய்வு செய்யவும் முடியும்.
      * படங்களும் குறியீடுகளும் நமது புரிதலை மேம்படுத்தும்.

13. ஒரு சொல் அல்லது சொற்றொடரைப் படம் வழியே குறிப்பிடுவது பட விளக்கப்படம் ஆகும்.

14. முற்காலத்தில் பட விளக்கப்படங்களை எழுத்து வடிவமாகப் பயன்படுத்தப்பட்டன. கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே எகிப்து மற்றும் மெசபடோமியாவில் இம்முறையைப் பயன்படுத்தினர்.

15. ஒரு பட்டை வரைபடம் என்பது (செங்குத்து அல்லது கிடைமட்ட) இணைப் பட்டைகள் சம நீளங்களிலும் / சம உயரங்களிலும் கொடுக்கப்பட்ட எண்ணிக்கைக்கு விகிதத்தில் அமைந்துள்ளவை ஆகும்.

16. பட்டை வரைபடத்தில்
     * ஒவ்வொரு  பட்டையின் அகலமும் சமம்.
     * அடுத்தடுத்த இரண்டு பட்டைகளுக்கிடையேயான இடைவெளிகளும் சமம்.

17. பிரசாந்த் சந்த்ர மஹலானோபிஸ் (29.6.1893 – 28.6.1972)
     இவர் வங்காளத்திலுள்ள பிக்ராம்பூரில் பிறந்தார். இவர் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். மேலும் இந்திய அரசாங்கத்திற்கு புள்ளியியல் விவர ஆய்வில் பெரிதும் உதவி புரிந்தவர்.

*******************


6. தகவல் செயலாக்கம்


·         சுடோகு என்ற சொல்லானது ஜப்பானிய மொழியிலிருந்து வந்ததாகும். இதில் ‘சு’ என்பதற்கு ‘எண்’ என்றும் ‘டோகு’ என்பதற்கு ‘ஒற்றை’ என்றும் பொருள்.

·         அதாவது இதில் உள்ள கிடைமட்ட மற்றும் செங்குத்து வரிசையில் உள்ள கட்டங்களில் உள்ள எண்கள் ஒரு தடவை மட்டுமே வருதல் வேண்டும்.

·         நவீன சுடோகுவைக் கண்டறிந்தவர் ஹாவர்டு கார்ன்ஸ். இவர் அமெரிக்காவைச் (இண்டியானா) சேர்ந்த கட்டடக் கலைஞர். இந்த சுடோகு 1979 இல் வெளியிடப்பட்டது.

**************



Post a Comment

0 Comments