VII STD NEW SYLLABUS - I TERM FORMULA - LESSON - 5


ஏழாம் வகுப்பு - புதிய பாடத்திட்டம்

முதல் பருவம்

5. வடிவியல்


1. நேர்கோடு:

   ஒரு நேர்கோடு என்பது இருபுறமும் முடிவுறாமல் நீள்வது ஆகும். நேர்கோடு AB  ஆனது எனக் குறிக்கப்படும். சில நேரங்களில் l, m, n முதலான ஆங்கில எழுத்துகளும் நேர்கோட்டைக் குறிக்கப்
பயன்படுத்தப்படுகின்றன.

   

2. நேர்கோட்டுத் துண்டு:

  ஒரு நேர்கோட்டுத்துண்டு என்பது இரு முடிவுப் புள்ளிகளைக் கொண்டது ஆகும். நேர்கோட்டுத் துண்டு AB ஆனது  எனக் குறிக்கப்படும்.
       



3. கதிர்:

  ஒரு கதிர் என்பது A என்ற புள்ளியில் தொடங்கி
B என்ற புள்ளி வழியாக ஒரு குறிப்பிட்ட
திசையில் முடிவில்லாமல் நீள்வது ஆகும்.
கதிர் AB ஆனது எனக் குறிக்கப்படும்.
               



4.  m மற்றும் n என்ற இரு கோடுகள்
இணையானவை எனில், அவற்றை m || m
எனக் குறிப்போம். இணை கோடுகள்
ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதில்லை.  

       


5. இரு கோடுகளுக்குப் பொதுவாக ஒரு புள்ளி
இருப்பின் அவை வெட்டும் கோடுகள் என
அழைக்கப்படும். மேலும் அப்பொதுப் புள்ளியானது கொடுக்கப்பட்ட இரு கோடுகளின் வெட்டும் புள்ளி ஆகும்.
  


    
6. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகள்
ஒரே நேர்கோட்டின் மீதமைந்தால் அவைகள்
ஒருகோடமைப் புள்ளிகள் என அழைக்கப்படும்.
அவ்வாறு அமையாத புள்ளிகள் ஒருகோடமையாப் புள்ளிகள் என அழைக்கப்படும். 




7. கோணங்கள்:

  ஒரு பொதுப்புள்ளியில் இருந்து புறப்படும் இரு கதிர்களுக்கு இடையே அமைவது ஒரு கோணம் ஆகும். ஒரு கோணத்தினை அமைக்கும் கதிர்கள்
அக்கோணத்தின் கைகள் எனப்படும். பொதுப்புள்ளியானது அக்கோணத்தின் முனை எனப்படும்.

8.  *  குறுங்கோணம்:

     90° இக்குக் குறைவான அளவுள்ள கோணம் குறுங்கோணம் என்று அழைக்கப்படும்.
 


     * செங்கோணம்:
               சரியாக 90° அளவுள்ள கோணம் செங்கோணம் எனப்படும்.
  


      * விரிகோணம்:
     90° இக்கு அதிகமான அளவுள்ள கோணம் விரிகோணம் எனப்படும்.
 



      * நேர்கோணம்:
                சரியாக 180° அளவுள்ள கோணம் நேர்கோணம் எனப்படும்.
    


        * பின்வளைகோணம்:
                 கோண அளவு 180° இக்கு மேல் 360° இக்குள் இருந்தால் அது பின்வளைகோணம் என்று அழைக்கப்படும்.
  


9. * நிரப்பு கோணங்கள் :
               இரு கோணங்களின் கூடுதல் 90° எனில் அக்கோணங்கள் நிரப்பு கோணங்கள் எனப்படும்.

     * மிகை நிரப்பு கோணங்கள்:
             இரு கோணங்களின் கூடுதல் 180° எனில் அக்கோணங்கள் மிகை நிரப்பு கோணங்கள் எனப்படும்.

        * இரு கோணங்கள், மிகை நிரப்பு கோணங்கள் எனில், அவை ஒன்றுக்கொன்று மிகை நிரப்பி எனப்படும்.

10. பொதுவான ஒரு முனை, பொதுவான கதிர் கொண்ட வெவ்வேறு உட்பகுதிகளைக் கொண்ட இரண்டு கோணங்கள் அடுத்துள்ள கோணங்கள் எனப்படும்.

11. மிகை நிரப்பு கோணங்களாக இருக்கும் அடுத்துள்ள கோணங்கள் நேரிய கோண இணைகள் எனப்படும்.


12. ஒரு நேர்கோட்டின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளியில் அமையும் கோணம் 180° ஆகும்.

13. ஒரு புள்ளியில் அமையும் கோணங்களின் கூடுதல் 360° ஆகும்.

14. இரு கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும்போது உருவாகும் இரு சோடி
அடுத்தமையாக் கோணங்கள், குத்தெதிர்க் கோணங்கள் என அழைக்கப்படும்.

15. குத்தெதிர்க் கோணங்கள் சமமானவை.

16. இரு கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடு குறுக்குவெட்டி எனப்படும்.

17. இரு கோடுகளை ஒரு குறுக்குவெட்டி சந்திக்கும்போது வெட்டும் புள்ளிகளில் எட்டுக் கோணங்கள் அமைகின்றன.




18. ஒரு கோட்டுத்துண்டினை இரு சம பாகங்களாகப் பிரிக்கும் செங்குத்துக் கோடானது அக்கோட்டுத்துண்டின் செங்குத்து இரு சமவெட்டி எனப்படும்.

19. ஒரு கோணத்தை இரு சம அளவுகளாகப் பிரிக்கும் கோடு அல்லது கோட்டுத்துண்டு
அக்கோணத்தின் இருசம வெட்டி எனப்படும்.

20. இரு இணைகோடுகளைக் குறுக்குவெட்டி வெட்டும்போது

   (i) ஒத்த கோணச் சோடிகள் சமம்.


   (ii) ஒன்று விட்ட உட்கோணச் சோடிகள் சமம்.
 

   (iii) ஒன்று விட்ட வெளிக்கோணச் சோடிகள் சமம்.
 

    (iv) குறுக்கு வெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பு கோணங்கள்.
 

    (v) குறுக்குவெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த வெளிக்கோணங்கள் மிகை நிரப்பு கோணங்கள்.





                                      **********************

Post a Comment

0 Comments