VII STD NEW SYLLABUS - I TERM FORMULA - LESSON-2






ஏழாம் வகுப்பு - புதிய பாடத்திட்டம்

முதல் பருவம்

2. அளவைகள்


1. 1971 முதல் SI அலகுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2. SI அலகுகள்:
        
      தூரம்  −  மீட்டர்
      எடை −  கிராம்
      நேரம்  −  வினாடி

3. சுற்றளவு என்பது ஒரு மூடிய வடிவத்தின் எல்லையின் நீளமாகும். பரப்பளவு என்பது அதன் அடைபட்ட பகுதியாகும்.

4. செவ்வகத்தின் சுற்றளவு = 2 × (l + b)

    செவ்வகத்தின் பரப்பளவு = l × b

5. சதுரத்தின் சுற்றளவு = 4 × a

    சதுரத்தின் பரப்பளவு = a × a


6. செங்கோண முக்கோணத்தின் பரப்பளவு = 1/2 × b × h

7. எதிர்ப் பக்கங்கள் இணையாகவும் சமமாகவும் உள்ள நான்கு பக்கங்கள் கொண்ட ஓர் மூடிய வடிவமானது   இணைகரம்  ஆகும். 

8. இணைகரத்தின் பரப்பளவு = அடிப்பக்கம் × உயரம்

    இணைகரத்தின்  சுற்றளவு என்பது அதன் நான்கு பக்கங்களின் கூடுதல் ஆகும்.

9. ஓர் இணைகரத்தின் பரப்பளவை இரண்டு  முக்கோணத்தின் பரப்பளவுகளாக   எழுதலாம்.

10.  ஒரு செவ்வகம் இணைகரமாகும். ஆனால் ஓர் இணைகரமானது செவ்வகம் ஆகாது.

11. ஓர் இணைகரத்தில் அனைத்துப் பக்கங்களும் சமமாக இருப்பின் அது ஒரு சாய்சதுரம் ஆகும்.

12. ஒரு சாய்சதுரத்தில் 


          1. அனைத்துப் பக்கங்களும் சமம்.


          2. எதிர்ப்பக்கங்கள் இணை.


          3. ஒரு சாய் சதுரத்தை அதன் மூலைவிட்டம் சமப் பரப்பளவு கொண்ட நான்கு முக்கோணங்களாகப்  பிரிக்கும்.
          4. மூலைவிட்டங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக வெட்டிக்கொள்ளும்.


13. அடிப்பக்கமும், உயரமும் கொடுக்கப்பட்டிருப்பின்

 சாய்சதுரத்தின் பரப்பளவு = அடிப்பக்கம் × உயரம்.


14. மூலைவிட்டங்கள் கொடுக்கப்பட்டிருப்பின்,
 சாய்சதுரத்தின் பரப்பளவு = 1\2 × d1
×  d2

15. ஒர் இணைகரத்தில் ஒரு சோடி எதிர்ப் பக்கங்கள் மட்டும் இணையாக இல்லாமலிருந்தால் அதை சரிவகம் என அழைக்கிறோம்.   இணைப் பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு உயரம் எனப்படும்.

16. ஓர் சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமமாக இருந்தால் அதை இருசமபக்க சரிவகம் என்கிறோம்.

17. சரிவகத்தின் பரப்பளவு = 1/2
× h × (a + b)

pstm certificate pdf - Download

******************  




Post a Comment

0 Comments